இங்கிலாந்து Vs இந்தியா
5 மாநில தேர்தல் முடிவுகள்
உலக கோப்பை கால்பந்து - 2022
நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் - வனிதா விஜயகுமார்
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி நிறுவத்திடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய் ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலமாக நடிகையானவர், வனிதா விஜயகுமார். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர், சினிமாவில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து 'தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி' என பல படங்களில் நடித்துள்ளார். இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப் ட்ராப்' படத்தில் நடித்துள்ளார். பின்னர் பல வருடங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் சினிமாக்களில் நடித்து வருகிறார். நடன மாஸ்டர் ராபர்ட்-வனிதா இருவரும் இணைந்து நடித்த 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தை வனிதாவே இயக்கியிருந்தார். இப்படத்தில் 'மைக்கேல் மதன காமராஜ்' படத்தில் வரும் 'சிவராத்திரி..' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று, இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி நிறுவத்திடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் இளையராஜா இசையில் உருவான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தின் "ராத்திரி சிவ ராத்திரி" பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கான உரிமையை பணம் கொடுத்து சோனி நிறுவனத்திடம் வாங்கியதாக நடிகை வனிதா கூறியுள்ளார்.
இதுபற்றி வனிதா விஜயகுமார் கூறும்போது, "படம் வெளியாவதற்கு முன்பு, இளையராஜாவை சந்தித்து ஆசிபெற்றேன். அப்போது இந்த பாடல் பற்றி அவரிடம் கூறினேன். அவர் ஓ.கே. என்றுதான் சொன்னார். ஆனால் இப்போது வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சி தருகிறது. அதோடு அந்த பாடல் ஒரு இசை நிறுவனத்தின் கைவசம் உள்ளது. அவர்களிடம் உரிமை வாங்கித்தான் பாடலை பயன்படுத்தி உள்ளேன். அதனால் எனக்கு வழக்கைப் பார்த்து பயம் இல்லை. வழக்கு போடுவதாக இருந்தால், அந்த இசை நிறுவனத்தின் மீதுதான் போட வேண்டும். சிறு வயதில் இருந்து இளையராஜா வீட்டில் வளர்ந்து இருக்கிறேன். நான் அவர் வீட்டிற்கு மருமகளாக போய் இருக்க வேண்டியவள். சில விஷயங்களை வெளியில் சொன்னால், வருத்தம் ஏற்படும் என்பதால் சொல்ல விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
ஆசிரியரின் தேர்வுகள்...
அதிகம் வாசிக்கப்பட்டவை
தனித்தன்மை பாதுகாப்பு